ETV Bharat / bharat

மேற்குவங்க மக்கள் அமைதி காக்க வேண்டும் - மம்தா பானர்ஜி

author img

By

Published : Dec 14, 2019, 10:01 PM IST

கொல்கத்தா: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக மேற்குவங்கத்தில் மக்கள் யாரும் போராட வேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

mamta-asks-west-bengal-people-to-maintain-calm-in-cab
மம்தா பானர்ஜி

நாடாளுமன்றத்தில் பல்வேறு கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பின் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவிற்கு எதிராக அஸ்ஸாம், திரிபுரா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அஸ்ஸாமில் அரசு ஊழியர்கள் வரும் 18ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்று மேற்குவங்கத்தில் மாநில தழுவிய போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ந்து இன்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானார்ஜி தெரிவித்ததாவது, "மேற்குவங்கத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகையால் மக்கள் அனைவரும் அமைதி காத்திட எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தேசிய குடிமக்கள் பதிவேடாகட்டும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவும் சரி ஒருபோதும் மேற்குவங்கத்தில் அமல்படுத்தப்படாது. எனவே சட்டத்தை கையில் எடுத்து சாலையை முடக்கி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது அரசு சொத்திற்கு பங்கம் விளைவிப்பது போன்ற செயல்களில் மக்கள் யாரும் ஈடுபட வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படியுங்க: குடியுரிமை மசோதா உள்நாட்டுப் பிரச்னை - மாலத்தீவு முன்னாள் அதிபர் ஈடிவி பாரத்துக்கு சிறப்புப் பேட்டி!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.