கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் போல்பூர் மாவட்டத்தின் சாந்திநிகேதனில் உள்ள அமர்த்தியா சென் வீடு தொடர்பான சர்ச்சையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது கடிதத்தில் யாரையும் நேரடியாக பெயரிடவில்லை என்றாலும், சர்ச்சை தொடர்பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
அதில், “சில புதியவர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் உங்கள் குடும்ப சொத்து குறித்து முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறத் தொடங்கியுள்ளனர்.
உயர்ந்தவர்களின் போராட்டத்துக்கு எனது ஆதரவு உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமர்த்தியா சென் வீட்டின் மீது விஸ்வ பாரதி அமைப்பினர் சொந்தம் கொண்டாடினார்கள். இந்நிலையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை மம்தா பானர்ஜி, “புதுமுகங்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள்” என்று மறைமுகமாக கூறியுள்ளார்.
முன்னதாக வியாழக்கிழமை (டிச.24), இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் மம்தா பானர்ஜியிடம் கேள்விகள் எழுப்பினார்கள்.
அப்போது அவர், “அமர்த்தியா சென்னை அவமதிக்கக் கூடாது” எனத் தெரிவித்தார். மேலும், வித்யாசாகர் மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரையும் பாஜக அவமதித்தது எனவும் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் பொருளாதார மேதை அமர்த்தியா சென்னுக்கு கடிதம் மூலமாக ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிஎம் கிஷான் திட்டத்தை தடுப்பது ஏன்? மம்தா பானர்ஜிக்கு நரேந்திர சிங் தோமர் கடிதம்!