கொல்கத்தா (மேற்கு வங்கம்): நாடு முழுவதும் இன்று அரசியலமைப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டுகிறது. இந்நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரை புகழ்ந்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், " அரசியலமைப்பு தினமான இன்று ஜனநாயக இந்தியாவை கட்டமைத்த டாக்டர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துகிறேன். நாட்டின் இறையாண்மை, ஜனநாயகம், சமூகத்துவம், மதச்சார்பின்மை, நீதி, குடியரசு, சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவம் மூலம் இந்திய அரசியல் சாசனத்தை உயிர்ப்புடன் வைத்திருப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் சிற்பி என அழைக்கப்பட்ட டாக்டர், அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டம் 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், 1950 ஜனவரி 26ஆம் தேதி அமலுக்கு வந்தது. எனவே ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்பு தினம் அல்லது சம்விதான் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் தொடர் பதற்றம்!