ETV Bharat / bharat

கரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் ஒன்றிணைய வேண்டும் - மம்தா - கரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் ஒன்றிணைய வேண்டும்

கொல்கத்தா: அமைதியையும் சமூக நல்லிணக்கத்தை பேணிக் காக்க கரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

Mamata
Mamata
author img

By

Published : Apr 24, 2020, 4:38 PM IST

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் மே 24ஆம் தேதி கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அவர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பர். ரமலான் மாதத்தின் முதல் நாள், நாளை கடைபிடிக்கப்படவுள்ளது. இதுகுறித்த வாழ்த்து செய்தியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார்.

அதில், "அனைவருக்கும் ரமலான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புனித மாதத்தில் சுயபரிசோதனை செய்து கொண்டு நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அடுத்த ஒரு மாத காலத்திற்கு நோன்பு மேற்கொள்ளவுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.

கரோனா குறித்து அவர், "பொது நலனை கருத்தில் கொண்டு வைரஸ் இல்லா சமூகத்தை உருவாக்குவதற்கு அனைவரும் வீட்டிலிருந்தபடியே தொழுகையை மேற்கொள்ள வேண்டும். இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில், நம் மாநிலம் எப்போதும் ஒற்றுமையை கடைப்பிடித்துள்ளது. கரோனாவுக்கு எதிரான போரில் ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் இந்த புனித மாதத்தில் பேணிக் காக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ஊரடங்கு என்ற தாழ் போட்டு எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்? - சிதம்பரம் கேள்வி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.