ETV Bharat / bharat

'கரோனா தடுப்புப் பணிகளில் இருந்து பிற துறைகளைச் சேர்ந்தோர் விடுவிக்கப்படுவர்' - மல்லாடி கிருஷ்ணாராவ் - pudhucherry news

புதுச்சேரி: பிற துறைகளைச் சேர்ந்தவர்கள் கரோனா தடுப்புப் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

pudhucherry news  Malladi Krishna Rao
'கரோனா தடுப்புப் பணிகளில் இருந்து பிற துறைகளைச் சேர்ந்தோர் விடுவிக்கப்படுவர்' - மல்லாடி கிருஷ்ணா ராவ்
author img

By

Published : Oct 16, 2020, 5:36 PM IST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 287 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 287 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 306 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவுக்கு சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். புதுச்சேரியில் அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களும் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறி வருகின்றனர். சுகாதாரத்துறையினர் மட்டும்தான் முழுமையாக கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிற துறைகளில் 10 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே கரோனா பணியில் உள்ளனர். இது குறித்து, முதலமைச்சரிடம் தகவல் தெரிவித்துள்ளேன். பிற துறைகளில் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பிற துறைகளைச் சேர்ந்தவர்கள் கரோனா பணியில் இருந்து விடுவிக்க சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது.

மல்லாடி கிருஷ்ணா ராவ்

புதுச்சேரியில் ஓட்டல்கள் நிரம்பி வருகின்றன. வெளி மாநிலத்தினர் வருகையும் அதிகரித்துள்ளது. எனவே, இனி தொற்று அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டும் பரிசோதனைகளை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. முகக் கவசம், தகுந்த இடைவெளி, கைகளை சுத்தமாக வைத்தால் 99 விழுக்காடு கரோனா பாதிப்பு ஏற்படாது என்பதை உணர்ந்து மக்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'பணிநீக்கம் கிடையாது... ஊதியக் குறைப்பு கிடையாது' - கரோனாவிலும் ஊழியர்களை கவனித்துக்கொண்ட கே.டி.டி.சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.