மாநில பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்ததில் துணைநிலை ஆளுநர் கிரன்பேடி கோபமாகிவிட்டார் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதுச்சேரி மாநில காங்கிரஸ் ஆட்சியை கலைக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து முயற்சித்து வருகிறார். ஏற்கனவே இவர், புதுச்சேரி ஆட்சியை கலைக்க தீவிரமாக முயற்சித்தார். பின்னர் மாநில பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் தருவதற்கு தடையாக இருந்தார். இருப்பினும் மத்திய அரசு புதுவை மாநில பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்துவிட்டது. இதனால் கிரண்பேடியின் முயற்சி தோல்வியடைந்துவிட்டது.
இதன் காரணமாக அவர் கோபமாகிவிட்டார். கடந்த 21 நாள்களாக பட்ஜெட் தொடர்பான கோப்பினை கிரண்பேடி வேண்டுமென்றே வைத்துக்கொண்டு தாமதப்படுத்தினார். மேலும் புதுச்சேரி மாநில பட்ஜெட்டிற்கு நான்கு நிபந்தனைகளை அவர் விதித்துள்ளார். இதை அம்பலப்படுத்தினால் புதுச்சேரி நிலை என்னவாகும் என முதலமைச்சர் நாராயணசாமி விரைவில் தெரிவிப்பார்" என்றார்.
இதையும் படிங்க... முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!