ETV Bharat / bharat

பொருளாதார மீட்பு நடவடிக்கையில் களமிறங்கிய இந்தியன் ஆயில் நிறுவனம் - திட்டப்பணிகள்

டெல்லி: தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் குழாய் பதிக்கும் பணியினை இந்தியன் ஆயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது.

பொருளாதார மீட்பு நடவடிக்கையில் களமிறங்கிய இந்தியன் ஆயில் நிறுவனம்

author img

By

Published : Jul 8, 2020, 9:46 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் பொருளாதார இழப்பை சந்தித்தது. இதனை;க கருத்தில்கொண்டு மத்திய அரசு பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கையாக நாட்டின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) ரூ.1.04 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டப்பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்த பைப்லைன் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஆத்மனிர்பர் பாரத்தை(சுயசார்பு இந்தியா) மையமாகக் கொண்டு நாடு முழுவதும் சுமார் 336 பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளது. 2020 ஜூன் வரை இந்த பணிகளுக்காக சுமார் ரூ ஆயிரத்து 726 கோடி செலவிடப்பட்டது. மேலும், இந்த ஜூலை மாதத்தில் சுமார் 50 திட்டங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன” என்று ஐஓசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மார்ச் 2021 வரையிலான நிதியாண்டில் அதன் திட்டமிடப்பட்ட மூலதன செலவினமான ரூ. 26 ஆயிரத்து 143 கோடி இலக்கை அடைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொருளாதார நிலையற்ற தன்மை நிலவியபோதும், ஐஓசி முதல் காலாண்டில் ரூ. 2674 கோடி இலக்கை அடைந்துள்ளது. இந்த பணிகள் பொருளாதாரத்தை புதுப்பிப்பதோடு மட்டுமல்லாமல், எரிபொருள் பொருள்களின் தடையில்லா விநியோகத்தை உறுதி செய்வதாகவும், இந்த காலகட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கி வருவதாகவும் ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.

2020 ஏப்ரல் 20 முதல் ஜூன் 20 வரை இந்த திட்டங்களிள் மூலம் சுமார் 13.3 லட்சம் மனித நாள்கள் வேலை உருவாக்கப்பட்டன. தொழிலாளர்கள் கணக்கில் நிறுவனம் ரூ. 276 கோடியை செலுத்தியுள்ளது ”என்று ஐஓசி குறிப்பிட்டுள்ளது. தற்போது ஒடிசா, தெலங்கானா மற்றும் ஆந்திரா வழியாக ஆயிரத்து 212 கி.மீ தூரத்திற்கும், ரூ. மூன்றாயிரத்து 338 கோடி செலவில் பணிகள் நடைபெறுகிறது.

மேலும், ரூ. 1206 கோடிக்கு என்னூர்-திருவள்ளூர்-பெங்களூரு-புதுச்சேரி-நாகப்பட்டினம்-மதுரை-தூத்துக்குடி ஆர்-என்ஜி குழாய் பணிகளும் ஆயிரத்து 170 கி.மீ தூரத்திற்கு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.கேரளாவின் கொச்சி துறைமுகத்தில் எல்பிஜி இறக்குமதி வசதிகள் போன்ற முக்கிய சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பு திட்டங்கள் ரூ. 714.25 கோடி, ரூ .690 கோடி மதிப்புள்ள பாரதீப் துறைமுகம் இப்போது தொடங்கப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தில் ரூ. 611 கோடி செலவில் பாயிண்ட் டெர்மினல் கட்டுமானத்தின் குழாய் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.ரூ .14,810 கோடி மதிப்புள்ள பெட்ரோ கெமிக்கல் ஆலை மற்றும் எத்திலீன் கிளைகோல் திட்டத்தை உள்ளடக்கிய பரவுனி சுத்திகரிப்பு விரிவாக்க பணிகளும் தற்போது நடந்துவருகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.