உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா ஜான்சி-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் டிசிஎம் வாகனம் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 3 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வாகனத்தில் சுமார் 17 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் வந்த வாகனத்தின் டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது என மஹோபா காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: மோடியின் கனவுத் திட்டத்தின் 29 ஊழியர்கள் பணிநீக்கம்!