மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் பகுதியில் உள்ள அரசு உரக்கடையில் விவசாயிகளுக்கு யூரியாவை வழங்காமல் பதுக்கி வைப்பதாக மகாராஷ்டிரா வேளாண் துறை அமைச்சருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன.
இதையடுத்து, களத்திலிறங்கிய அமைச்சர் தாதா, புகாரில் உள்ள அரசு உரக்கடைக்கு போலியான வாடிக்கையாளரை 10 மூட்டை யூரியாவை வாங்க அனுப்பினார். ஆனால், கடை ஊழியர் யூரியா காலியாகிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
உடனடியாக விரைந்த அமைச்சர், கடையின் ஊழியரை விசாரிக்க தொடங்கினார். கடையின் ரெஜிஸ்டரை ஆய்வு செய்த அமைச்சர், கண்டிப்பாக யூரியா ஸ்டார்க் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்
இதற்கிடையில், அமைச்சரின் வருகையை அறிந்த வேளாண் அலுவலர்கள் கடைக்கு உடனடியாக விரைந்தனர். பின்னர், அலுவலர்கள் நடத்திய ரெய்டில், கடைக்குள் ஆயிரத்து 386 மூட்டைகளில் யூரியாக்கள் இருப்பது தெரியவந்தது. இவற்றை அதிக விலைக்கு ஊள்ளர் வர்த்தகர்களிடம் கடை ஊழியர் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், குறிப்பிட்ட ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட அமைச்சர், வேளாண் துறை தர கட்டுபாட்டு அலுவலரை கட்டாய விடுப்பில் அனுப்பினார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் 5 பேரை கொன்ற புலி உயிரிழப்பு!