மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் யஷ்வந்த் நகரில் வசிக்கும் கைலாஸ் டாங்கோடு என்பவருக்கு அனைத்து வேலைகளிலும் சிக்கல் ஏற்பட்டு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் காரணம் தனது பாட்டி சூனியம் வைத்தது தான் என நினைத்த கைலாஷ், வீட்டிலிருந்த கோடரியை எடுத்துக்கொண்டு பாட்டியை பலமுறை தாக்கி கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதையடுத்து, வீட்டிலிருந்த நபர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்த காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைலாசை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அத்தையை கொன்றுவிட்டு தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த ஒடிசாவாசி!