ETV Bharat / bharat

விறுவிறுப்பாகும் மகாராஷ்டிரா சட்ட மேலவை தேர்தல் - விறுவிறுப்பாகும் மகாராஷ்டிரா சட்ட மேலவை தேர்தல்

மும்பை: மகாராஷ்டிராவில் காலியாக உள்ள ஒன்பது இடங்களுக்கு சட்ட மேலவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்களா எனக் கேள்வி எழுந்துள்ளது.

thackeray
thackeray
author img

By

Published : May 6, 2020, 5:48 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொங்கு சட்டப்பேரவை அமைந்ததால் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. பல்வேறு அரசியல் குழப்பங்களுக்குப் பின் இறுதியில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தது.

சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே கடந்தாண்டு நவம்பர் 28ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இருப்பினும் அவர் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உறுப்பினராக இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஒருவர் அமைச்சர் அல்லது முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்குள் மேலவை அல்லது கீழவை என ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக வேண்டும்.

ஆனால், கோவிட்-19 தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் எவ்வித தேர்தலும் நடைபெறவில்லை. இதனால் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் தனக்கு உதவும்படி மோடிக்கு தாக்கரே கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் ஆலோசித்து முடிவெடுப்பதாக மோடி தாக்கரேவிடம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, சட்டமேலவைத் தேர்தலை நடத்தக் கோரி மாநில ஆளுநர் கோஷ்யாரி, தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார்.

காலியாகவுள்ள ஒன்பது இடங்களுக்கு மே 21ஆம் தேதி தேர்தல் அறிவித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதுகுறித்து விவாதிக்க ஆளும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளிலிருந்து தலா இருவரை களமிறக்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், பாஜக சார்பில் நான்கு பேர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டி உருவாகும் பட்சத்தில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் வாக்குப்பதிவுக்காக மும்பை வர நேரிடும். இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பாலாசாகேப் தோரத் கூறுகையில், 'போட்டியை தவிர்க்க அனைத்து கட்சிகளும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும்' என்றார்.

சிறிய கட்சிகளைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள், சுயேச்சைகள் ஆகியோரின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிராவில் ஒரு சட்ட மேலவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 29 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆளும் கூட்டணிக்கு 169 வாக்குகள் மட்டுமே உள்ளன. எனவே, ஆறு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க அதற்கு இன்னும் 5 வாக்குகள் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோவிட்-19: மோடிக்கு மக்கள் ஆதரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.