மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டம் டிக்ராஸ் தெஹ்ஸில் அருகேயுள்ளது பிலவ்தி கிராமம். இந்தக் கிராமத்திலுள்ள கோயிலின் அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.
இதைக் கண்ட கோயிலுக்கு வந்தவர்கள் அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோயிலைச் சுற்றி ரத்தக் கறைகளுடன் உடைந்த வளையல்கள், மயக்க ஊசிகள், உடைந்த பற்கள், துண்டிக்கப்பட்ட காது உள்ளிட்டவை இருந்தன.
மேலும், இறந்துபோன பெண்ணின் வலக்கையின் பச்சை குத்திய வடிவமைப்பு கத்தியால் கீறப்பட்டிருந்தது. ஆனால் காவல் துறையினர் எங்கு தேடியும் துண்டிக்கப்பட்ட தலை கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது கொலையா? இல்லை மூட பழக்கவழக்கங்களுக்காக நிகழ்ந்த உயிர் பலியா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: