சொந்த கழிவறையைச் சுத்தம் செய்யவே முகம் சுளிக்கும் இக்காலகட்டத்தில், மற்றவர்களின் கழிவறையைச் சுத்தம் செய்து மத்தியப் பிரதேச எரிசக்தி துறை அமைச்சர் பிரதியுமான் சிங் தோமர் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். மண்டல ஆணையரிடம் ஆலோசனை நடத்த அமைச்சர் பிரதியுமான் சிங் அரசு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, தாங்கள் பயன்படுத்தும் கழிவறை சுத்தமற்று இருப்பதாக பெண் ஊழியர்கள் அமைச்சரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
புகாரைக் கேட்ட அமைச்சர், கழிவறையைச் சுத்தம் செய்வதற்கான பொருள்களை வாங்கி அதனைச் சுத்தம் செய்துள்ளார். மேலும், அரசு அலுவலகத்தில் கழிவறையைச் சுத்தம் செய்யும் பொறுப்பை அலுவலர்களே ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பின்னர், அரசு அலுவலங்களில் உள்ள பெண்கள் கழிவறை சுத்தமாக இருக்கிறதா என்பதை வருவாய்த் துறை இணைச் செயலர் ஆர்.பி. பாரதி உறுதிசெய்ய வேண்டும் என அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார். கழிவறையை அசுத்தம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கோவிட்-19 நெருக்கடி : நாடு முழுவதும் நீர் இருப்பு குறைகிறது - ஜல் சக்தி வெளியிட்டுள்ள அதிர்ச்சிகர தகவல்!