மத்தியப் பிரதேசம் மாநிலம், சிங்ராலியாவைச் சேர்ந்த பிரிஜேஷ் ஜாதவ், மூட நம்பிக்கைகளை பெரிதளவில் பின்பற்றி வந்துள்ளார். கடந்த சில நாள்களாக விநோதமான பூஜை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், பிரிஜேஸ் தான் வணங்கும் குல்தேவதாவை மகிழ்விக்க, மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார். மனைவியின் சடலத்தை வீட்டிலேயே புதைத்த கணவர், தலையை மட்டும் வெட்டி பூஜை அறையில் காணிக்கையாகப் படைத்துள்ளார்.
அச்சமயத்தில் வீட்டிற்கு வந்த பிரிஜேஸின் இரண்டு மகன்கள், இச்சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அங்கிருந்து தப்பியோடியவர்கள் உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பிரிஜேஸை உடனடியாக கைது செய்தனர். இறந்த பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவலர் அருண் பாண்டே கூறுகையில், "ஆரம்பத்தில் இச்சம்பவம் மூடநம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது. ஆனால் பிரிஜேஸ் தன் மனைவியின் நடத்தையை குறித்தும் பேசினார். எனவே, தீவிர விசாரணைக்கு பிறகே உண்மை வெளிவரக்கூடும்" எனத் தெரிவித்தார்.