மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. இந்நிலையில், மூத்தத் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருடன் ஆதரவாளர்கள் ஆறு அமைச்சர்கள் உள்பட 22 எம்.எல்.ஏ.க்களும், தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால், கமல்நாத்தின் அரசு, ஆட்டம் காணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் கமல்நாத் கடந்த 13ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாநில ஆளுநர் லால்ஜி தாண்டனை சந்தித்தார். இதையடுத்து, ஆளுநர் லால்ஜி தாண்டன் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு சனிக்கிழமை இரவு வெளியானது. ஆளுநரின் உத்தரவின்பேரில், மத்தியப் பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை (மார்ச் 16) நடக்கிறது. இதற்கிடையில் ஜோதிராதித்ய சிந்தியா, முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானை இன்று சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு