மத்தியப் பிரதேச மாநிலத்தின் தொழிலாளர் சட்டத்தில் ஏற்படுத்தி உள்ள மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கத்தின் மூலமாக அவர் நேற்று அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, “தொழில்களுக்கு சில பெரிய சலுகைகளை வழங்கவும், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இந்த புதுமையான முயற்சியை நாட்டிலேயே முதன்முறையாக மத்தியப் பிரதேச அரசு அறிமுகப்படுத்துகிறது.
மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் கரோனா பரவல் பாதிப்பிற்கு பிறகான வேலைகளில் தனி நபர் கடைப்பிடிக்க வேண்டிய தகுந்த இடைவெளியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் விதமாக தொழிற்சாலைகளில் பணி நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதாவது, 8 மணி நேரத்தில் இருந்து முதல் 12 மணி நேரம் வரை நீட்டித்துக்கொள்ளலாம். 8 மணி நேரத்திற்குப் பிறகு தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்ற விருப்பமாக இருந்தால் மட்டுமே இதற்கு அனுமதி வழங்கப்படும். ஒரு தொழிலாளி வாரத்திற்கு 72 மணி நேரம் மட்டுமே கூடுதல் நேரம் வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்.
தொழிலாளர்களுக்கு அதற்கேற்ப ஊதியம் வழங்கப்பட வேண்டும். இந்த மாற்றங்களை தொழிற்சாலை உரிமையாளர்கள் ஒழுங்குபடுத்தலாம். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய தொழில்கள் தொடங்க சாதகமான சூழலுடன் புதிய மாற்றங்களை மேற்கொள்கிறோம்.
தொழில் சாலைகளை இங்கிருந்து இடமாற்றுவதைத் தடுத்து நிறுத்துவதும், பிற இடங்களிலிருந்து புதிய தொழில்சாலைகளை நமது மாநிலத்திற்கு ஈர்த்துவருவதும் இந்த மாற்றத்தின் முதன்மை நோக்கமாகும். புதிய தொழில்கள் மாநிலத்தில் எளிதில் நிறுவப்படும். மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். பதிவு மற்றும் உரிமப் பணிகளுக்கு அனுமதி வழங்க 30 நாள்களுக்கு மேலாக எடுத்துக்கொள்ளப்படும் கால அவகாசத்தை ஒரே நாளில் செய்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், ஒப்பந்தக்காரர்கள், உற்பத்தியாளர்கள், மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் வரும் கட்டுமான முகவர் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் பதிவு மற்றும் உரிமம் ஒரு நாளில் முடித்துத் தரப்படும்.
தொழிற்சாலை உரிமம் புதுப்பித்தலை இப்போது ஒரு ஆண்டிற்குப் பதிலாக பத்து ஆண்டுகள் வரை நீட்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நிதியாண்டிற்குப் பதிலாக ஒப்பந்தத்தின் முழு காலத்திற்கும் உரிமம் வழங்கப்படும். மத்திய பிரதேசத்தின் விவசாய சட்டமான மண்டி சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம், விவசாயிகளுக்கு வீட்டிலிருந்து பயிர்களை விற்க வசதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் தனியாரிடமும் தமது விளைப்பொருள்களை விற்கலாம். இதன் மூலமாக போட்டி அதிகரிக்கும், அப்போது விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களின் நலன்கள் சமரசம் செய்யப்படாது.”என தெரிவித்தார்.
இதையும் படிங்க : ஆந்திர விஷவாயுக் கசிவு துயரம், நீதி விசாரணை வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்