மத்தியப் பிரதேசத்தின் நீமாச்சின் ஜவாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 30 வினாடிகளுக்குள் காசாளரின் கவுண்டரிலிருந்து ரூ.10 லட்சம் கொள்ளையடித்து தப்பி ஓடிய 10 வயது சிறுவன் மீது, வங்கிப் பணத்தைத் திருடியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறையினர் இன்று (ஜூலை 15) தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," வங்கியில் பொருத்தப்பட்ட சிசிடிவியில் பதிவான காட்சிகளை பார்வையிட்டபோது, நேற்று (ஜூலை 14) காலை 11 மணி அளவில் 10 வயது சிறுவன் வங்கிக்குள் நுழைந்து காசாளர் அறையிலிருந்து, 10 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுக்கள் கொண்ட இரண்டு கட்டுகளை எடுத்து ஏதும் அறியாதது போல் தனது பைகளில் வைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.
இதுகுறித்து விசாரித்தபோது, வங்கிக்குள் இருந்த ஒருவரின் உதவியைக் கொண்டு இச்சம்பவம் நிகழ்ந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக வங்கி முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. தற்போது அச்சிறுவனையும், அவருக்கு வழிகாட்டுதலாக வங்கிக்குள் இருந்தவரையும் தேடி வருகிறோம்" என்றனர்.