ETV Bharat / bharat

சிறிய ரக துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்க பாதுகாப்புத் துறை திட்டம்!

டெல்லி: சீனாவுடன் பதற்றம் நிலவி வரும் நிலையில், சிறிய ரக துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்க பாதுகாப்புத்துறை திட்டமிட்டு வருகிறது.

Made in India
Made in India
author img

By

Published : Oct 7, 2020, 8:22 PM IST

Updated : Oct 7, 2020, 8:28 PM IST

கார்பைன் எனப்படும் சிறிய ரக துப்பாக்கிகளை இறக்குமதி செய்வது பெரிய அளவில் பயன் தரவில்லை என கூறப்பட்டு வரும் நிலையில், அவற்றை இந்தியாவிலேயே தயாரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டு வருகிறது.

சீனாவுடன் பதற்றமான சூழல் நீடித்து வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. போர்க்களத்தில் குறுகிய தூரத்தில் உள்ள எதிரிகளை சுட்டு வீழ்த்த இந்த சிறிய ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கு வங்கம் இஷாபூரில் உள்ள ஆர்ட்ணன்ஸ் ஃபேக்டரி போர்டு என்ற அரசு நிறுவனம் சிறிய ரக துப்பாக்கிகளை தயாரித்து வருகிறது. இறக்குமதி செய்வதற்கு பதில் துப்பாக்கிகளை மொத்தமாக இங்கிருந்து வாங்குவது குறித்து அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுதங்களை வாங்கும் நோக்கில், இங்கிருந்து தயாரிக்கப்படும் துப்பாக்கிகளை முதற்கட்ட சோதனைக்கு முப்படை வீரர்கள் உட்படுத்தியுள்ளனர்.

ஆயுதங்கள் இறக்குமதி செய்யும் போது குறைந்த அளவிலான துப்பாக்கிகளையே மற்ற நாடுகள் விற்கிறது. எனவே, பெரிய எண்ணிக்கையில் துப்பாக்கிகளை வாங்குவதற்கு பதில் உள்நாட்டிலேயே தயாரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதுகாப்பு கையகப்படுத்தும் கவுன்சில், வெளிநாட்டிலிருந்து சிறிய ரக துப்பாக்கிகளை வாங்குவது குறித்த முடிவினை எடுக்காமல் தாமதப்படுத்தி வந்தது.

இப்போதைக்கு, 3.5 லட்சம் சிறிய ரக துப்பாக்கிகள் பாதுகாப்புத்துறைக்கு தேவைப்படுகிறது. இதில், 94 ஆயிரம் துப்பாக்கிகள் இறக்குமதி மூலம் பெற திட்டமிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: விமான போக்குவரத்து இயக்குநரக பாதுகாப்புத் துறை தலைவராக எம்.ஏ. கணபதி நியமனம்

Last Updated : Oct 7, 2020, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.