ETV Bharat / bharat

'மகா காளீஸ்வர் அவனைக் காப்பாற்றுவார்' - விகாஸ் துபே தாயார் பேட்டி! - மகாலீஸ்வரர் அவனை காப்பாற்றுவார்

லக்னோ: ரவுடி கும்பலின் தலைவனான விகாஸ் துபேவை மகா காளீஸ்வர் காப்பாற்றுவார் என அவரது தாயார் சாரல் தேவி பேட்டியளித்துள்ளார்.

மகாலீஸ்வரர் அவனை காப்பாற்றுவார் -விகாஸ் துபே தாயார் பேட்டி!

author img

By

Published : Jul 9, 2020, 4:51 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரின் உள்ளூர் ரவுடியான விகாஸ் துபே என்பவரைக் காவல் துறையினர் கைது செய்யசென்றனர். அப்போது, துபேவின் ஆட்கள் காவல் துறையினர் மீது நடத்திய தாக்குதலில் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உள்பட எட்டு காவலர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து விகாஸ் துபேவை இன்று (ஜூலை 9) மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைன் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து பேசிய விகாஸ் துபே தாயார் சாரல் தேவி, 'என் மகன் ஆண்டுதோறும் உஜ்ஜைனில் உள்ள மகாகாளீஸ்வர் (சிவபெருமான்) கோயிலுக்குச் சென்று வருவான். அந்த மகா காளீஸ்வர் என் மகன் எங்கிருந்தாலும் காப்பாற்றுவார்’ என நம்பிக்கைப்பட தெரிவித்தார்.

மேலும், தனது மகன் தற்போதைய அரசிற்கு ஆதரவாக இல்லை. அதனால்தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும்; தற்போது தனது மகன் பாஜகவில் இல்லை, சமாஜ்வாதி கட்சியில் உள்ளார் எனவும் சாரல் தேவி தெரிவித்தார்.

இதையும் படிங்க...ராஜஸ்தானில் எட்டு வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.