இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக மக்களவை இரவு 12 வரை செயல்பட்டது. ஜூலை 11ஆம் தேதி ரயில்வே துறை மீதான மானியக் கோரிக்கை இரவு 11:58 வரை நடைபெற்றது. இதேபோல் நேற்று விவசாயம், கிராமப்புற வளர்ச்சி மீதான மானியக் கோரிக்கை மதியம் 2:45க்கு தொடங்கி இரவு 11:59 வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 90 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டின் முதன்மை பிரச்னையாக இருந்து வரும் விவசாயிகள் தற்கொலைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் மக்களவை செயல்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், "சில தொழில்நுட்ப காரணங்களால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது, இல்லையெனில் அதிகாலை 3மணி வரை மக்களவை செயல்பட்டிருக்கும்" என்றார்.