இது குறித்து மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெட்டுக்கிளி தாக்குதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
குறிப்பாக, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வேளாண்மைத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், எல்லைப் பாதுகாப்புப் படையின் ஒத்துழைப்புடன் அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்திவருகிறோம்.
ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மார், பார்மெர், ஜோத்பூர், பிகானேர், ஸ்ரீ கங்கா நகர், ஜெய்ப்பூர், நாகௌர், அஜ்மர் மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பானா மாவட்டத்திலும், உத்தப் பிரதேசத்தில் உள்ள லலில்பூர் பகுதியிலும் வெட்டுக்கிளிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றன.
10 'Locust Circle' அலுவலகங்களிலும், ஜோத்பூரில் உள்ள வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், அஜ்மர், தௌசா, சித்தூர்கர் - மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்பூர், உத்தப் பிரதேசத்தின் ஜான்சி ஆகிய பகுதிகளிலும் தற்காலிக தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தீயணைப்பு வாகனங்கள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களின் மூலம் தினமும் காலை நேரத்தில் பூச்சிக் கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன.
இதற்காக ராஜஸ்தானில் இரண்டாயிரத்து 142 டிராக்டர்கள், 46 தீயணைப்பு வாகனங்கள் - மத்தியப் பிரதேசத்தில் 83 டிராக்டர்கள், 47 தீயணைப்பு வாகனங்கள் - உத்தரப் பிரதேசத்தில் நான்கு டிராக்டர்கள், 16 தீயணைப்பு வாகனங்கள் - பஞ்சாபில் 50 டிராக்டர்கள், ஆறு தீயணைப்பு வாகனங்கள் - குஜராத்தில் 38 டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
வெட்டுக்கிளிகளின் போக்கைக் கண்காணிக்க வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பின் ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தஞ்சைக்கு வந்த வெட்டுக்கிளி கூட்டம்!