ETV Bharat / bharat

கரோனாவை தொடர்ந்து அடுத்த சிக்கல் - படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்! - டெல்லி அரசு

டெல்லி : வேளாண் நிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவரும் பாலைவன வெட்டுக்கிளிகளை சமாளிப்பது குறித்து டெல்லியில் அவசர கூட்டம் நடைபெற்றது.

கரோனாவை தொடர்ந்து அடுத்த சிக்கல் - படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்!

author img

By

Published : Jun 28, 2020, 4:25 AM IST

பாகிஸ்தானிலிருந்து பெருங்கூட்டமாக பறந்துவந்த வெட்டுக்கிளிகள் டெல்லியின் அண்டை மாநிலமான அரியானாவின் குருகிராமின் வேளாண் நிலங்களில் கடுமையான அழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அதன் அடுத்தக்கட்ட இலக்காக தென்கிழக்கு டெல்லி இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

ஒருவேளை, டெல்லி நோக்கி பாலைவன வெட்டுக்கிளி கூட்டம் வந்தால் அவற்றை எதிர்கொள்வது குறித்து விவாதிக்க இந்த அவசர கூட்டம் நடத்தப்பட்டதாக அறிய முடிகிறது.

டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல் செயலாளர், ஆணையர், இயக்குநர், வேளாண் துறை உயர் அலுவலர்கள், டெல்லி தெற்கு மற்றும் கிழக்கு மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் ஊடகங்களைச் சந்தித்த அமைச்சர் ராய், "அண்டை மாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை டெல்லி அரசு நன்கு உணர்ந்திருக்கிறது. அதனை எதிர்கொள்ள அவற்றின் நடவடிக்கைகள் கூர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, வெட்டுக்கிளிகளால் பாதிப்பைக் கண்டிருக்கும் அரியானாவின் குருக்ராம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கள ஆய்வு செய்ய டெல்லியைச் சேர்ந்த வேளாண் துறை அலுவலர்கள் செல்லவுள்ளனர். நிலைமையைச் சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்கள் அளிக்கும் அறிக்கையினடிப்படையில் முடிவெடுக்கப்படும்" என்றார்.

வெட்டுக்கிளிகள் தொடர்பான எச்சரிக்கை அமைப்பைச் சேர்ந்த கே.எல்.குர்ஜார் கூறுகையில், " பூச்சிகள், ஹரியானாவில் உள்ள ஃபரிதாபாத் மற்றும் பல்வால் நோக்கி செல்கின்றன. மரங்கள், கூரைகள் மற்றும் தாவரங்களில் குடியேறிய வெட்டுக்கிளிகளின் படையெடுப்பைக் கண்டு அச்சமடைந்த குருகிராமில் வசிப்பவர்கள் பலர் தங்கள் உயரமான பெர்ச்சிலிருந்து வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

மே மாதத்தில் இந்தியாவிற்கு நுழைந்து பேரழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் பெருக்கூட்டமாய் ஒன்றிணைந்து வருகின்றன.

பெருந்திரளாக வந்தவை முதலில் ராஜஸ்தானை தாக்கின. பின்னர் பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் என ஒவ்வொரு மாநிலமாக பரவி வருகின்றன.

பூச்சி உயிரியல் வல்லுநர்கள் கூற்றுப்படி, இந்தியா பாலைவன வெட்டுக்கிளி, புலம்பெயர்ந்த வெட்டுக்கிளி, பம்பாய் வெட்டுக்கிளி, மர வெட்டுக்கிளி என பரவலாக நான்கு வகையான வெட்டுக்கிளிகள் காணப்படுகின்றன.

இப்போது அழிவை ஏற்படுத்திவரும் பாலைவன வெட்டுக்கிளி மிகவும் அழிவுகரமானதாக கருதப்படுகிறது. இது மிக விரைவாகப் பெருகும் தன்மையைக் கொண்டது.

வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கம் மண்ணின் ஈரப்பதம் மற்றும் உணவு ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கிறது. காலநிலை மாற்றமும் பாலைவன வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கத்திற்கு காரணமாக இருக்கின்றன.

இந்த வெட்டுக்கிளி வகையானது ஒரு நாளில் சுமார் 150 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கும் திறன் கொண்டது. சராசரியாக 35,000 பேர் ஒரு நாளில் சாப்பிடும் அளவிலான உணவை இது உண்ணும்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.