உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றானது, இந்கியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
குறிப்பாக, நாட்டின் தலைநகர் டெல்லி, வர்த்தக தலைநகர் மும்பை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லி அரசின் கீழ் இயங்கிவரும் எல்.என்.ஜே.பி எனப்படும் மருத்துவமனையில், மூத்த மருத்துவராகப் பணியாற்றி வந்தவர், நேற்று உயிரிழந்துள்ளார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மேக்ஸ் எனப்படக்கூடிய தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.