முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, 84 வயதான பிரணாப் முகர்ஜியின் மூளையில் உள்ள ரத்த நாளங்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், அவரின் உடல்நிலை மோசமாக உள்ளது எனவும், வென்டிலேட்டர் உதவியோடு அவர் சுவாசித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், அவரின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய வேண்டி தலைவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரணாப் முகர்ஜியின் மகளைத் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்த கேட்டறிந்தார். 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். வெளியுறவு, நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விகாஸ் துபே என்கவுன்ட்டர்: விசாரணை குழுவில் அதிரடி மாற்றம்?