மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று (அக். 8) காலமானார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள வீட்டில் ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
74 வயதுடைய ராம்விலாஸ் பஸ்வான், ஒன்பது முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். ஐந்து முறை மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...ஒரே தொகுதியில் 8 முறை மக்களின் உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்ட பஸ்வான்!