ஹைதராபாத்: சுமார் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் சேவை செய்து வரும் ராமோஜி குழுமத்தின், ‘மார்கதர்சி சிட் ஃபண்ட்’ நிறுவனம் இன்று (டிசம்பர் 11) ஓசூரில் தனது புதிய கிளையை திறக்கவுள்ளது. இதன் வாயிலாக மொத்தம் நான்கு மாநிலங்களில் 120 கிளைகள் கொண்ட நிறுவனமாக மார்கதர்சி விரிவடைந்துள்ளது. 1962 முதல் இந்நிறுவனம் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது.
சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான டர்ன் ஓவர் செய்துள்ளது. புதிய கிளை திறப்பு விழா குறித்து பேசிய மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண்,"ஓசூர் கிளை திறப்பு விழா என்பது மார்கதர்சிக்கு ஒரு பெருமையான தருணமாக இருக்கும். தமிழ்நாடு எப்போதுமே எங்களுக்கு ஒரு முக்கியமான பகுதியாகும்.
இந்த புதிய கிளை மூலம், எங்கள் நம்பகமான சேவைகளை ஓசூர் மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். மார்கதர்சியில் வெளிப்படையான சேமிப்பு விருப்பங்கள் மூலம் நிதி சுதந்திரத்தை வளர்த்து வருகிறோம். இந்த பயணத்தில் ஓசூர் கிளை மற்றொரு படியாகும்," என அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான சேமிப்புத் திட்டங்களைத் தேடும் தனிநபர்கள் மற்றும் வணிகர்களுக்கு விருப்பமான தேர்வாக மார்கதர்சி அமைந்துள்ளது. காரணம் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளுக்கும், தொழில்முனைவோருக்கும் ஏற்ற வகையில் நிதித் தீர்வுகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஓசூரில் திறக்கப்படும் புதிய கிளையும் இந்த சிறந்த பாரம்பரியத்தைத் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர் கிளை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும் நிலையில், இதற்கு முன்னதாக கர்நாடக மாநிலம் கெங்கேரியில் மார்கதர்சி சிட் ஃபண்ட் தமது 119-ஆவது கிளையை காலை 11 மணிக்குத் திறக்கவுள்ளது.
கெங்கேரி கிளை திறப்பு விழா குறித்து பேசியிருக்கும் மார்கதர்சி நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண் கூறுகையில், "கர்நாடகா மாநிலம் கெங்கேரியில் திறக்கப்படவுள்ள புதிய கிளை எங்கள் நோக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். மார்கதர்சி சிட் ஃபண்ட் கர்நாடக மக்களுக்கு நெருக்கமானது. இது எங்கள் சந்தாதாரர்கள் தங்கள் இலக்குகளை அடைய உதவும் வகையில் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் ஒழுக்கமான சேமிப்பு விருப்பங்களை வழங்க உறுதி பூண்டுள்ளது. எங்கள் சந்தாதாரர்கள் எங்களிடமிருந்து எதிர்பார்க்கும் சிறப்பான சேவையைத் தொடர நாங்கள் தொடர்ந்து உழைத்து வருகிறோம்," எனத் தெரிவித்துள்ளார்.