அண்ணல் காந்தியடிகளின் 151ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி நாட்டின் முக்கியத் தலைவர்கள் தங்கள் நினைவு செய்தியை பகிர்ந்துவருகின்றனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் , 'காந்தி ஜெயந்தி தினத்தில் அவரது கொள்கைகளான உண்மை, அகிம்சை, அன்பு அகியவற்றின் மூலம் மக்களின் சமத்துவத்திற்கும், ஒருங்கிணைப்பிற்கும் பாடுபடுவோம். ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் காந்தி உந்துசக்தியாக திகழ்பவர்' என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'காந்தி ஜெயந்தி அன்று அண்ணலுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். காந்தியின் வாழ்க்கையிலிருந்தும் அவரது சீரிய சிந்தனைகளிலிருந்தும் கற்க வேண்டியது நிறைய உள்ளது. அன்பு, வளர்ச்சி உள்ளிடக்கிய இந்தியாவை உருவாக்க அண்ணல் காந்தியின் வழி நின்று பயணம் செய்வோம்' என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அத்துடன் காந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காணொலி ஒன்றையும் மோடி பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கிராம சபை கூட்டத்தின் நோக்கம், அதிகாரம், தேவை என்னென்ன?