வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும் நிசார்கா புயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிசார்கா புயல் தகவல்கள் உடனுக்குடன்...
17:30 June 03
அடுத்த 6 மணி நேரத்தில் நிசார்கா புயல் வலுவிழக்கும்
17:23 June 03
நிசார்கா புயல் மகாராஷ்டிரத்தில் கரையை கடக்கும்போது ஒரு வீட்டின் மேற்கூரையை தூக்கி வீசும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
17:07 June 03
கரையை கடந்தது நிசார்கா புயல்
நிசார்கா புயல் கரையை கடக்கும்போது 100 கிமீ, 110 கிமீ வேகம் வரை காற்று வீசியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16:56 June 03
கரையை கடந்தது நிசார்கா புயல்
அரபிக் கடலில் உருவான நிசார்கா புயல் மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக் அருகே கரையை கடந்தது.
16:41 June 03
நிசார்கா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிராவில் இண்டிகோவின் 17 விமானங்கள் உள்பட 31 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல் மும்பை, தானே, ராய்காட் ஆகிய மாவட்டங்களில் ரயில் சேவை நிறுத்தப்பட்டன. புயலை எதிர்கொள்ள மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
16:34 June 03
நிசார்கா புயலால் புனே நகரில் பெய்துவரும் கனமழை காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
16:17 June 03
மும்பையில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழை நீரோடு கலந்து கழிவுநீரும் ஓடியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
16:02 June 03
கரையைக் கடக்க தொடங்கியுள்ளது நிசார்கா புயல்
அரபிக் கடலில் உருவான நிசார்கா புயல், பலத்த சூறைக்காற்றுடன் மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்ட கடலோரப் பகுதி வழியாக கரையை கடந்துவருகிறது.
15:57 June 03
15:22 June 03
மும்பை: நிசார்கா புயல் இன்று கரையைக் கடக்கவுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வுநிலை புயலாக உருவெடுத்துள்ளது. நிசார்கா என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
சுமார் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் வலுவான புயலாக நிசார்கா உருவெடுத்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.