கரோனா பரவல் காரணமாக நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கரோனா தாக்கம் இன்னும் குறையாத நிலையில், இந்தத் தேர்வுகளை மேலும் தள்ளி வைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இச்சூழலில் நீட், ஜேஇஇ ஆகிய தேர்வுகள் திட்டமிட்டபடி செப்டம்பரில் நடைபெறும் என மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வுகளை எழுதுவதற்கு, தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து வருவதாகவும் தேசிய திறனாய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (ஆக. 23) ட்வீட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில், “இன்று லட்சக்கணக்கான மாணவர்கள் ஏதோ சொல்கிறார்கள். மத்திய அரசு நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகள் குறித்து மாணவர்களின் மனதில் எழும் எண்ணங்கள் குறித்து கேட்டறிந்து, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வைக் காண வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
आज हमारे लाखों छात्र सरकार से कुछ कह रहे हैं। NEET, JEE परीक्षा के बारे में उनकी बात सुनी जानी चाहिए और सरकार को एक सार्थक हल निकालना चाहिए।
— Rahul Gandhi (@RahulGandhi) August 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
GOI must listen to the #StudentsKeMannKiBaat about NEET, JEE exams and arrive at an acceptable solution.
">आज हमारे लाखों छात्र सरकार से कुछ कह रहे हैं। NEET, JEE परीक्षा के बारे में उनकी बात सुनी जानी चाहिए और सरकार को एक सार्थक हल निकालना चाहिए।
— Rahul Gandhi (@RahulGandhi) August 23, 2020
GOI must listen to the #StudentsKeMannKiBaat about NEET, JEE exams and arrive at an acceptable solution.आज हमारे लाखों छात्र सरकार से कुछ कह रहे हैं। NEET, JEE परीक्षा के बारे में उनकी बात सुनी जानी चाहिए और सरकार को एक सार्थक हल निकालना चाहिए।
— Rahul Gandhi (@RahulGandhi) August 23, 2020
GOI must listen to the #StudentsKeMannKiBaat about NEET, JEE exams and arrive at an acceptable solution.
கரோனா நெருக்கடிக்கு மத்தியில் நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆதரவாக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
இதைப் போலவே, நேற்று (ஆக. 22) ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநிலத்தின் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியாவும் ஜேஇஇ, நீட் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில், ”மத்திய அரசு, நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளின் பெயரில் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது. உடனடியாக இந்த இரண்டு தேர்வுகளையும் அரசு ரத்து செய்ய வேண்டும். இந்தக் கல்வி ஆண்டின் சேர்க்கைக்கு இந்தத் தேர்வுகளுக்கு மாற்றாக வேறு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இதற்கு முன்பு இல்லாத வகையில் உருவாகியுள்ள இந்த நெருக்கடிக்கு, முன் எப்போதும் எடுக்கப்படாத முடிவுதான் தீர்வாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'கரோனா பரவலில் தப்லீக் ஜமாத்தினர் பலிகடாவாக்கப்பட்டனர்' - உயர் நீதிமன்றம் காட்டம்