கர்நாடகாவில் இரண்டாவது நாள் மது விற்பனையின் போது, 36.37 லிட்டர் இந்திய மதுபானங்கள் மூலமாக ரூ.182 கோடியும், 7.02 பீர் ரக மதுபானங்கள் விற்பனை மூலமாக ரூ.15 கோடியும் வருமானம் கிடைத்துள்ளது.
கரோனா முடக்கத்துக்கு பின்னர், 41 நாள்கள் கழித்து கர்நாடகாவில் மதுபானங்களின் விற்பனை திங்கள்கிழமை (மே4) தொடங்கியது. முதல் நாள் மட்டும் ரூ.45 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது.
இந்நிலையில் இரண்டாவது நாள் மது விற்பனை ரூ.182 கோடியாக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பீர் மதுபானம் விற்பனை ஆகியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பதிலளித்த கலால் வரி அலுவலர், “நாங்கள் இந்தளவு மது விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்.
கர்நாடகாவில் மதுகடைகள் திறக்கப்பட்ட நிலையில் சில பெண்களும் வரிசையில் நின்று மதுவாங்கி சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தெலங்கானாவில், மதுபானங்களின் விலை 16 விழுக்காடு அதிகரிப்பு