புதுச்சேரியில் அனைத்து மதுபான உரிமங்களுக்கும் வெளிப்படையான ஏலமுறை மூலமாக மட்டும்தான் இழப்பு ஏற்பட்ட தொகையை மீட்டெடுக்க முடியும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வாட்ஸ்அப்பில் கூறியிருந்ததாவது, "அரசுக்கு ஏற்பட்ட இழப்பை மீட்டெடுப்பதை நோக்கி நிர்வாகம் முன்னேறுகிறது. வரி வருவாய் கசிவுகளைத் தடுக்க, அனைத்து விஷயங்களும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. சிபிஐ தற்போது கடந்த கால மதுபான விஷயங்களை விசாரிக்கிறது. கலால் உட்பட இதர துறைகளில் இந்திய தணிக்கைத்துறை அளித்த ஆட்சேபனைகள் அனைத்தும் ஒருங்கே தொகுக்கப்படும். தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் தவிர்க்கப்படும்.
குறிப்பாக, மோட்டார் வாகன சட்ட விஷயத்தையும் கவனத்தில் கொள்வோம். இது மக்களின் பணம், அத்தொகை முழுவதும் மக்களின் நல்வாழ்வு மற்றும் அவர்களின் கவனிப்புக்காகவே திருப்பிச் செல்ல வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: மின்சாரம் தனியார் மயம் - தன்னிச்சையான முடிவு என நாராயணசாமி குற்றச்சாட்டு!