ETV Bharat / bharat

உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கழிவுகள் - கரோனா பாதிப்பு

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மருத்துவகழிவுகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து ஒரு பார்வை.

Waste
Waste
author img

By

Published : Aug 20, 2020, 9:43 PM IST

திட ரசாயன கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதுடன், பிளாஸ்டிக் கழிவுகளுடன் சேர்ந்து பல ஆண்டுகளாக நம்மை அச்சுறுத்தி வருகின்றன. 7 கோடி மக்கள் தொகைக்கும் குறைவாக உள்ள இங்கிலாந்தில் மட்டும் ஒரு ஆண்டுக்கு ஒரு மனிதன் தினந்தோறும் பயன்படுத்தி தூக்கி எறியும் முகக்கவசத்தினால் 66,000 டன்கள் கழிவுகள் சேரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவாலான கூடுதல் அச்சுறுத்தலை வெளிப்படுத்துகிறது. கோவிட் பெருந்தொற்று காரணமாக தினமும் 700 மெட்ரிக் டன்களுக்கு அதிகமான உயிரியியல் மருத்துவக்கழிவுகள் சேருவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்திருக்கிறது. மேலும் இந்த கழிவுகளை அகற்ற போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநிலங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது.

கோவிட் கழிவுகளை எடுத்துச் செல்லும் வாகனங்களை தடைசெய்யக் கூடாது என்று காவல்துறைக்கு தெலுங்கானா மாநில சுற்றுச்சூழல் வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இந்தக் கழிவுகள் 48 மணி நேரத்துக்குள் அப்புறப்படுத்தப்படாவிட்டால், காற்றின் மூலம் கொரோனா தொற்று பரவுக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அது எச்சரிக்கை விடுத்துள்ளது. கழிவுகளை எரித்து சாம்பலாக்குவதற்கான போதுமான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்த உத்தரவாதங்கள் இருந்தபோதிலும் கள நிலவரம் என்பது அச்சுறுத்துவதாக இருக்கிறது. நாடு முழுவதும் 84 ஆயிரம் மருத்துவமனைகள் உள்ள நிலையில் அதில் 200-க்கும் குறைவான மருத்துவமனைகள் மட்டு்மதான் சொந்தமாக கழிவு அகற்றும் வசதிகளைக் கொண்டுள்ளன. மருத்துவமனைகளில் மட்டுமின்றி, பல நோயாளிகளுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கள நிலவரப்படி, முக கவசங்கள், கையுறைகள், சிரிஞ்ச்கள் உள்ளிட்ட வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் உபயோகிக்கும் கழிவுகளை தனியாகப் பிரித்து வைத்து அகற்றுவதற்கு போதுமான வசதிகள் இல்லாத தால், பொதுவாக வீட்டில் சேரும் கழிவுகளுடன் சேர்த்தே அவை அப்புறப்படுத்தப்படுகின்றன. தடுப்பூசிகள் வந்த பின்னர், கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமானதாக இருக்கும். அப்போது கோவிட் தொற்றால் ஏற்படும் கழிவுகளும் இயல்பிலேயே குறைந்து விடும். ஆனால், இது உண்மையான பிரச்னைக்கு தீர்வாக இருக்காது. நாட்டில் ஆண்டுதோறும் 62 மில்லியன் டன்கள் குப்பை சேருகின்றன. இதில் 45 மில்லியன் டன் குப்பைகள் எந்தவித மறு சுழற்சிக்கும் உட்படுத்தப்படாமல் கொட்டப்படுகிறது. எனவே அச்சுறுத்தும் இந்த உயிர்கொல்லி கழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதால் நீரில் வாழும் எண்ணற்ற உயிரினங்கள் உயிரிழக்கின்றன. அனைத்து பகுதிகளிலும் அதீதமாக குவிந்து கிடக்கும் உபயோகம் அற்ற கழிவுகள், தெருக்களில் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளை உண்ணுவதால், மாடுகள் மற்றும் ஆடுகள் உள்ளிட்ட விலங்குகள் வேதனைளிக்கும் துன்பத்துடன் உயிரிழக்கின்றன. நாட்டில் கண்மூடித்தனமாக பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதன் மூலம் கடுமையான வெள்ளம் உட்பட பல்வேறு மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன.

பிளாஸ்டிக் கழிவுகளைஉபயோகிக்கத் தடைவிதித்தல், அதனை மறுசுழற்சி செய்தல் ஆகிய நடைமுறைகளால் ஆஸ்திரேலியா, தாய்லாந்து, ஸ்வீடன், அயர்லாந்து ஆகிய நாடுகள் கழிவுகளை கட்டுப்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. பிளாஸ்டிக் பொருட்களில் மூன்றில் ஒரு பகுதியை மறுபடி உபயோகித்தல் மற்றும் மறு சுழற்சி செய்வதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஜப்பான் புதிய போக்கை முன்னிறுத்தி உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை உருக்கி அதனை முகக் கவசங்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களாக மாற்றி கோவிட் பெருந்தொற்றை வருவாய் ஈட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக உகாண்டா மாற்றி இருக்கிறது.

கழிவுகளைப் பயன்படுத்தி வலுவான சாலைகளை கட்டமைப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை ஸ்காட்லாந்து முன்னெடுத்திருக்கிறது. கட்டுமானக்கழிவுகளில் 98 சதவிகித த்தை மறுசுழற்சி செய்வதன் மூலம் சிங்கப்பூர் உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. ஆனால், நமது நாடு? பிளாஸ்டிக் கில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா முன்னெடுத்திருக்கிறது. நகர்புற கழிவுகளைப் பயன்படுத்தி கிராமங்களுக்கான உரங்களை தயாரிப்பதற்கான வழிமுறைகளை அண்மையில் தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ளது. இந்த மாதத்தின் இறுதியில், பாக்யாநகரில் கழிவுகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் புதிய துறை ஒன்று தொடங்கப்பட உள்ளது. கழிவுகளில் இருந்து வெளிச்சத்தை பரப்பும் இதுபோன்ற ஆலைகள் நாடு முழுவதும் தொடங்கப்பட வேண்டும்.

புதுப்பிக்கத்தக்க வளங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து நீர் மற்றும் காற்றைப் பாதுகாக்க மக்களுக்கு விழிப்புணர்வுடன் கூடிய உத்திகளை அரசுகள் அறிமுகம் செய்ய வேண்டும். நாளைய இளம் தலைமுறையினர் சமூக உணர்வுடன் திகழக் கூடிய வகையில் அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆராய்ச்சி ரீதியிலான பாடத்திட்டங்களுடன் கல்வி முறை தூய்மைப்படுத்தப்பட வேண்டும். இது போன்ற புதுமையான, பன்முகத்தன்மையுடன் கூடிய செயல்பாடுகள்தான் தேசத்தில் இருக்கும் பிளாஸ்டிக் உட்பட அனைத்து விதமான கழிவுகளையும் அகற்றி, தேசத்தின் தூய்மையை காக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.