ETV Bharat / bharat

'வெற்றி, தோல்வி, தலைமைப் பண்பு' - இஸ்ரோவில் அப்துல் கலாம் கற்றுக்கொண்ட பாடம் - இஸ்ரோ தலைவர் சிவன்

வெற்றி, தோல்வியை குழுவும் தலைமையும் எப்படி அணுக வேண்டும் என்ற பாடத்தை தன்னுடைய தலைவர் சதீஷ் தவானிடம் இருந்து கற்றுக் கொண்டதாக அப்துல் கலாம் கூறியுள்ளார்.

ISRO
author img

By

Published : Sep 7, 2019, 1:24 PM IST

ஒட்டுமொத்த இந்தியாவும் சந்திரயான்-2 திட்டத்திற்காக இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் மேற்கொண்ட முயற்சியை நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகிறது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி தொடங்கி நாட்டு மக்கள் அனைவரும் இந்திய விஞ்ஞானிகளின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பெருமிதத்துடன் அங்கீகரித்துள்ளனர்.

வெற்றி, தோல்வி நிரந்தரமல்ல, முயற்சியே உயர்வுக்கான அடிப்படையாகும். இதை உணர்த்தும் வகையில் இந்திய மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட, மக்கள் குடியரசுத் தலைவரான ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், தான் இஸ்ரோவில் பணியாற்றிய போது நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை அடிக்கடி குறிப்பிடுவார். அந்த சம்பவம் என்ன என்பதைத் தற்போது பார்ப்போம்...

1973ஆம் ஆண்டு 'ரோகிணி' செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் திட்டத்தை இஸ்ரோ மேற்கொண்டது. அதன் திட்ட இயக்குநராக அன்றைய இளம் விஞ்ஞானியான அப்துல் கலாம் நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் கடும் உழைப்புக்குப்பின் 1979ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திட்டம் தயாரானது என அப்போதைய இஸ்ரோ தலைவர் சதீஷ் தவானிடம், அப்துல் கலாம் தெரிவித்தார். செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறத் தொடங்கியது. முதல் கட்ட நிகழ்வு வெற்றிகரமாக நிறைவேறிய நிலையில், இரண்டாவது கட்ட நிகழ்வு தோல்வியடைந்து செயற்கைக்கோள் வங்கக்கடலில் விழுந்தது.

dahwan
சதீஷ் தவான்
தனது திட்டம் தோல்வியடைந்ததும் மனமுடைந்த நிலையில் அப்துல் கலாம் சோர்வுடன் இருந்தார். தோல்வி குறித்து உரிய விளக்கமளிப்பதற்கான செய்தியாளர்கள் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. வளாகத்தில் குழுமியிருந்த செய்தியாளர்களை சந்தித்த அன்றைய இஸ்ரோ தலைவர் சதீஷ் தவான், தோல்விக்கான பொறுப்பு முற்றிலும் என்னுடையது தான் என பெருந்தன்மையுடன் தெரிவித்தார். தங்கள் குழுவினர் மிகச்சிறந்த உழைப்பை தந்ததாகவும், ஒரு வருடத்தில் மீண்டும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவோம் எனவும் சதீஷ் தவான் செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.அவர் சொன்னது போலவே 1980ஆம் ஆண்டு ஜூலை மாதம், திட்டத்தை அப்துல் கலாம் தலைமையிலான குழு வெற்றிகரமாக நிறைவேற்றியது. ஒட்டுமொத்த நாடுமே மகிழ்ச்சியைக் கொண்டாடியபோது திட்ட இயக்குநரான அப்துல் கலாமை அழைத்த தலைவர் சதீஷ் தவான், இம்முறை செய்தியாளர்கள் சந்திப்பை அப்துல் கலாம் நடத்த வேண்டும் எனக் கூறினார். தோல்வியின் போது செய்தியாளர்களை சந்தித்த சந்தித்த சதீஷ் தவான், வெற்றியின் போது திட்டத்திற்காக உழைத்த அப்துல் கலாம் முன்னிறுத்தப்பட்ட வேண்டும் என விரும்பினார். மேலும், அப்போதைய பிரதமரான இந்திரா காந்தியைச் சந்திக்கவும், அப்துல் கலாமையே அனுப்பினார் சதீஷ் தவான்.
tweet
இந்த சம்பவத்தை நினைவு கூறும் காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ் ட்வீட்
'தோல்வியின் போது தான் முன்னிற்றல், வெற்றியின்போது அணியை முன்னிறுத்துதல்' என்பதே தலைமைப் பண்பு. இந்த முக்கியப் பாடத்தைத் தனது தலைவரான சதீஷ் தவான் கற்றுக்கொடுத்ததாக பல மேடைகளில் அடிக்கடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் அப்துல் கலாம். தலைமைப் பண்புக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த சதீஷ் தவான் இந்தியாவின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான 'பத்ம விபூஷண்' விருதைப் பெற்றுள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள செயற்கைக்கோள் ஏவுதளத்திற்கு சதீஷ் தவானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
dhawan
சதீஷ் தவான் ஆய்வு மையம்

இன்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குத் துணையாக அதன் தலைவர் சிவனும், அவரின் குழுவுக்கு ஒட்டுமொத்த நாடும் உறுதுணையாக நிற்கிறது. வெற்றி, தோல்வி அல்ல முயற்சியே என்றும் நிரந்தரம்.

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு ஆறுதல் கூறும் மோடி

Intro:Body:

Abdul kalam Staish Dhawan Isro mission story

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.