பிரபல ஓவியரும், சிற்பியுமான குபேந்திரன் தந்தை பெரியார் திராவிடர் கழகத்துடன் இணைந்து இந்த மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார்.
அண்மையில் இந்திய அளவில் ட்ரெண்டான 'இந்தி தெரியாது போடா' என்ற கருத்தை பரப்பும் விதமாக இந்த மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், நீட் தேர்வை எதிர்க்கும் விதமாக மாணவி அனிதா அமர்ந்திருப்பது போல மணற்சிற்பம் செய்யப்பட்டுள்ளது.
பெரியார் பிறந்த நாள் தினமான இன்று அரசின் கரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, பொதுமக்கள் இதை நேரில் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.