ETV Bharat / bharat

100 வாட் பல்பிற்காக வாடகைக்கு குடியிருந்தவரைக் கொன்ற வீட்டு உரிமையாளர்!

டெல்லி: அதிகளவு 100 வாட் மின் விளக்கினை உபயோகித்ததாகக்கூறி, வீட்டில் வாடகைக்கு இருந்தவரை, வீட்டின் உரிமையாளர் கொன்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Landlord arrested for killing tenant over using 100-watt bulb

author img

By

Published : May 26, 2020, 3:53 AM IST

தென்கிழக்கு டெல்லியைச் சேர்ந்த அமித்(38), தன் வீட்டில் குடியிருந்தவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்துப் பேசிய டெல்லி காவல் துறையினர், ஹர்ஷ் விகார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குச் சொந்தக்காரர் அமித். இவர் குடும்பத்தினருடன் தரை தளத்தில் வசித்துவருகிறார். அந்த குடியிருப்பின் முதல் மாடியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தவர், ரிக்ஷா ஓட்டுநர் ஜெகதீஷ்.

ஜெகதீஷின் மனைவி சமையலறையில் தேவையின்றி 100 வாட் மின் விளக்கினை எரியவிட்டுவருவதாகவும், இதனால் மின்கட்டணம் அதிகளவு வர வாய்ப்புள்ளதாகவும் அமித் நேற்று முன் தினம் இரவு கோபமுடன் கூறியுள்ளார்.

அதிக மின்சாரம் உறிஞ்சும் விளக்கிற்குப் பதிலாக, எல்ஈடி விளக்கை பயன்படுத்துமாறும் கூறியுள்ளார். இதன்பின் அமித்திற்கும், ஜெகதீஷிற்கும் நடைபெற்ற வாக்கு வாதத்தின்போது, ஜெகதீஷை அமித் இரண்டு முறை அறைந்துள்ளார்.

இதில், கீழே விழுந்த ஜெகதீஷ் மயங்கியதால், உறவினர் ஒருவரின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அப்போது சிகிச்சைப் பலனிற்றி ஜெகதீஷ் உயிரிழந்தார்.

வெளிக்காயங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், அவர் இறந்ததற்கான காரணம் அறிய உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள் கீழே விழுந்தபோது, தலையில் ரத்தம் உறைந்து, ஜெகதீஷ் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து ஜெகதீஷின் மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்ததையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அமித்தைக் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: நிலத்தகராறில் கணவன், மனைவி வெட்டிக் கொலை...!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.