பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மாநிலத்தை ஆளும் நிதிஷ்குமார் அரசை விமர்சித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு காணொலி ஒன்றை வெளியிட்டு ட்வீட் செய்துள்ளார்.
அதில், "முதலமைச்சர் நாற்காலியின் பேராசைக்காக, நிதிஷ்குமார் பிகாரை ஆழ்ந்த சிக்கலில் ஆழ்த்தியுள்ளார். தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்றபின் தனது கூட்டாளிகளைக் காட்டிக் கொடுத்தார். நிதிஷுக்கு கொள்கை, விதி, அரசியல் ஒழுக்கநெறிகள் என ஏதும் கிடையாது" என்று விமர்சித்துள்ளார்.
பிகார் நிலப்பரப்பை சித்தரிக்கும் விதமாக உள்ளூர்வாசி ஒருவரை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள பரப்புரை காணொலியில், "15 ஆண்டுகள் கடந்துவிட்டன, நாற்காலியின் (முதலமைச்சர் பதவி) பொருட்டு, பிகார் தரமற்றவர்களின் கையில் சென்றுவிட்டது. குழந்தைகளின் கல்வி, நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ பராமரிப்பு, இளைஞர்களின் வேலைவாய்ப்பு , விவசாயிகளின் நலன் இவை அனைத்தும் நாற்காலிக்காக கைவிடப்பட்டன. அதிகார பசியுள்ளவர்களுக்குப் பாடம் கற்பிப்போம், புதிய திசையை நோக்கி செல்வோம்" என்ற கோஷத்துடன் அந்த காணொலி முடிந்தது.
-
कुर्सी के लालच में नीतीश कुमार ने बिहार को गर्त में पहुँचा दिया है। 2010 के चुनाव में बहुमत प्राप्त करने के बाद सहयोगी दल के साथ विश्वासघात किया और 2015 में हमारे दम पर जीतने के बाद पीठ में छुरा घोंपा।
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) October 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
नीतीश की कोई नीति, नियम और नियत नहीं। अब तो ये नेता भी नहीं रहा। pic.twitter.com/18NBtSxJo3
">कुर्सी के लालच में नीतीश कुमार ने बिहार को गर्त में पहुँचा दिया है। 2010 के चुनाव में बहुमत प्राप्त करने के बाद सहयोगी दल के साथ विश्वासघात किया और 2015 में हमारे दम पर जीतने के बाद पीठ में छुरा घोंपा।
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) October 16, 2020
नीतीश की कोई नीति, नियम और नियत नहीं। अब तो ये नेता भी नहीं रहा। pic.twitter.com/18NBtSxJo3कुर्सी के लालच में नीतीश कुमार ने बिहार को गर्त में पहुँचा दिया है। 2010 के चुनाव में बहुमत प्राप्त करने के बाद सहयोगी दल के साथ विश्वासघात किया और 2015 में हमारे दम पर जीतने के बाद पीठ में छुरा घोंपा।
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) October 16, 2020
नीतीश की कोई नीति, नियम और नियत नहीं। अब तो ये नेता भी नहीं रहा। pic.twitter.com/18NBtSxJo3
ராகோபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஷ்வி யாதவ் வேட்பு மனு தாக்கல் செய்ததை அடுத்து இந்த பரப்புரை காணொலி வெளியிடப்பட்டுள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையில் அமைக்கப்பட்டுள்ள "மகாகத்பந்தன்" (பெரும் கூட்டணியில்) காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பிகார் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்கிறது.
243 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட பிகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.