ETV Bharat / bharat

பொய் பேசுமாறு ஜாதவுக்கு பாக். அழுத்தம்: வெளியுறவுத் துறை குற்றச்சாட்டு

டெல்லி: பொய்யான கருத்துகளை தெரிவிக்குமாறு குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் அழுத்தம் கொடுத்துவருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.

kulbhushan
author img

By

Published : Sep 3, 2019, 7:54 AM IST

ஈரான் வழியாக பாகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து அந்நாட்டை உளவு பார்த்ததாக இந்தியக் கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரியும், குஷ்பூஷனை சந்திக்க அனுமதி வழங்கக் கோரியும் சர்வதேச நீதிமன்றத்தை இந்திய அரசு நாடியது.

இந்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சர்வதேச நீதிமன்றம், ஜாதவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்தும் தண்டனையைப் பாகிஸ்தான் பரிசீலிக்கவும் உத்தரவிட்டது. மேலும், ஜாதவை சந்திக்க அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்ட இந்திய அரசின் கோரிக்கையையும் சர்வதேச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இதனிடையே, ஆகஸ்ட் 2ஆம் தேதி குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்தியத் தூதர்கள் அனுமதிக்கப்படுவர் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குல்பூஷனை இந்தியத் தூதர்கள் சந்திக்கும்போது பாகிஸ்தான் அலுவலர்களும் உடனிருக்க வேண்டும் என நிபந்தனையைப் பாகிஸ்தான் முன்வைத்ததால் இந்தியா அதனை நிராகாரித்துவிட்டது.

இதையடுத்து, சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவை சந்திக்கப் பாகிஸ்தான் நேற்று இரண்டாவது முறையாக இந்தியத் தூதர்களுக்கு அனுமதி வழங்கியிருந்தது. அதனையேற்று, சுமார் மூன்று ஆண்டுகளில் முதன் முறையாக குல்பூஷன் ஜாதவை துணைத் தூதர் கவுரவ் ஹலுவாலியா சந்தித்தார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வெளியுறவுத் துறை:

குல்பூஷனுடனான இந்தியத் தூதரின் முழு அறிக்கையை எதிர்நோக்கியுள்ள நிலையில், கட்டுக்கதைகளை உருவாக்குமாறு பாகிஸ்தான் குல்பூஷனுக்கு அதீத அழுத்தத்தை கொடுத்துவருவது தெளிவாகியுள்ளது.

இதுபற்றி விரிவான அறிக்கை கிடைத்தும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Intro:Body:

kulbushan singh

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.