சீனாவில் உருவானா கரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்துவருகிறது. இதில் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகள், உள்நாட்டு போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. முன்னதாக, வெளிநாடுகளிலிருந்து வந்த கரோனா வைரஸ் பாதித்த இந்தியர்கள், தனிமைப்படுத்தல் அரங்கில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் எந்த அறிகுறியும் இல்லாதவர் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். இதில், வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டவர்கள் வெளி பகுதிகளில் சுற்றிவருவதாக தகவல் வெளியாகிவருகிறது.
இதைக் கட்டுப்படுத்த கர்நாடகா அரசு செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. அதில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்களது சுய புகைப்படத்தை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பதிவிட வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அரசு தனிமைப்படுத்தப்பட்ட அரங்குக்கு மாற்றப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி புகைப்படங்கள் எந்த நேரத்தில் எடுக்கப்பட்டது, எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் கவனிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க...நிஜாமுதீன் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட மக்களுக்கு கரோனா சோதனை!