இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதால் மெல்ல ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. அதன்படி விரைவில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து பேருந்துகளுக்கு அனுமதி தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கொல்கத்தாவிலுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் குறைந்தபட்ச பேருந்து கட்டணமாக 20 ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தனியார் பேருந்துகள் அமைப்பின் செயலர் தபன் பானர்ஜி கூறுகையில்,"கரோனா பரவலைத் தடுக்க தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இதனால் ஒவ்வொரு நிலையிலும் பயணச்சீட்டு கட்டணத்தை ஐந்து ரூபாயாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் செலவுகளைச் சமாளிக்க வேண்டும். இது குறித்து அரசுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.
முதல் 4 கி.மீ.க்கு ஒரு பயணிக்கு 20 ரூபாயும், 5 முதல் 8 கிலோமீட்டர்வரை 25 ரூபாயும், 9 முதல் 12 கிலோமீட்டர் வரை 30 ரூபாயும் 13 முதல் 16 கிலோமீட்டர் வரை 35 ரூபாயும், 17 முதல் 25 கிலோமீட்டர் வரை 40 ரூபாயும், அதன் பின் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் விகிதத்தில் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.
அதேபோல் மற்ற நகர்ப்புற, எக்ஸ்பிரஸ், குளிர் சாதன பேருந்துகளுக்கும் பயண கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக மேற்கு வங்கத்தில் கரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் பொதுப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்து தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சுவேந்து அதிகாரேவுடன் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக் கூட்டத்தில் டிக்கெட்களின் விலையை எவ்வளவு அதிகரிக்கலாம் என்பது குறித்து தனியார் நிறுவனங்கள் தங்கள் பரிந்துரையை அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்,
இதையும் படிங்க: நாடு திரும்பியோர் மட்டுமே உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய அனுமதி!