இது குறித்து அவர் புதுச்சேரி தலைமைச்செயலருக்கு பிறப்பித்த உத்தரவில், "தனியார் மென்பொருள் நிறுவனங்கள் மூலம் மின்னணு சாதனபட்டை அணிவித்து, கணினி மூலம் கண்காணிக்கப்பட்டு ஓட்டத் தேர்வுகள் நடத்தாமல் உடல்தகுதித்தேர்வுகள் மனித கண்காணிப்பில் விசில் முறையில் நடத்தப்படுகின்றன. மேலும், இதர பிராந்தியங்களில் உடல்தகுதித் தேர்வு நடத்த தனியாக 400 மீட்டர் டிராக் இல்லை என்பது போன்ற புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வந்துள்ளன.
அதனால், காவல்துறையில் ஆள்சேர்ப்பு செயல்முறை நியாயமான, கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட விதிகள், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நிலையான உத்தரவுகளின்படி இருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வழிவகுக்கும். இந்தப் பிரச்னைகள் குறித்து தகுதிவாய்ந்த அதிகாரத்தால் முடிவுகள் எடுக்கப்படும்வரை ஆள்சேர்ப்பு செயல்முறை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும்.
அதனால், சம்பந்தப்பட்ட கோப்புகளை உடனடியாக என்னிடம் சமர்ப்பிக்க தலைமைச் செயலாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் நகல் புதுச்சேரி மாநில காவல் துறைத் தலைவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.