கேரளாவில், கடந்த 24 மணி நேரத்தில் 141 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 503 ஆக உள்ளது.
இந்நிலையில் டெல்லியிலிருந்து திரும்பிய 60 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தீவிர கண்காணிப்பில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர்.
இவர்களில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இது குறித்து மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், “மாநிலத்தில் நோய்த்தொற்று பாதிப்பு மூவாயிரத்தை எட்டியுள்ளது. சிலருக்கு நோய்த்தொற்று எவ்வாறு பரவியது என்பதை கண்டறியமுடியவில்லை. நிலைமை மோசமாக உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: 'ராணுவத்திலிருந்து மருத்துவர்கள், செவிலியர் தேவை' - அமித் ஷாவுக்கு கெஜ்ரிவால் கடிதம்