கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமலில் இருக்கும் ஊரடங்கு மே 3ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர் தேசிய அளவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது அனைவரின் கேள்வியாக இருக்கிறது.
அதேநேரம், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடரும் என்று உள் துறை அமைச்சகம் ஏற்கெனவே சூசகமாகத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நாடு முழுவதும் பாதிப்புகள் அடிப்படையில் மாவட்ட வாரியாக சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதில் நாட்டில் கரோனா பெருந்தொற்று முதன்முதலில் பாதித்த மாநிலமான கேரளாவின் தலா இரண்டு மாவட்டங்கள் பச்சை, சிவப்பு மண்டலங்களிலும், 10 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்திலத்திலும் உள்ளன.
பசுமை மண்டல மாவட்டங்கள் | |
1. | எர்ணாகுளம் |
2. | வயநாடு |
சிவப்பு மண்டல மாவட்டங்கள் | |
1. | கண்ணூர் |
2. | கோட்டயம் |
மீதமுள்ள பத்து மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்தின் கீழ்வருகின்றன.
இதையும் படிங்க...நான்கு லட்சம் மலையாளிகள் கேரளா திரும்ப விருப்பம்!