கேரள மாநிலம் கோழிகோட்டை சேர்ந்த சமீர் என்பவர், சட்டத்துக்கு புறம்பாக முத்தலாக் முறையைப் பயன்படுத்தி தனது மனைவியை வீட்டை விட்டு குழந்தைகளுடன் அனுப்பியுள்ளார். அரபு நாட்டில் பணிபுரிந்து வந்த சமீர், விடுமுறைக்கு வந்த சமயத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இதைத் தொடர்ந்து அவரது மனைவி ஃபாத்திமா, தனது இரண்டு குழந்தைகளுடன் கணவர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இது குறித்து பேசிய ஃபாத்திமா, “தன் கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்வதற்காக, என்னையும், ஒன்றும் அறியாத என் குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியேற்றினார்” எனக் கூறினார். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், இஸ்லாமிய பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 இன் 3 மற்றும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.