இளங்கலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு 2020- 21ஆம் ஆண்டிற்கான சேர்க்கை குறித்து ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்வதற்கான செயல்முறைகளை கேரள பல்கலைக்கழகம் நேற்று (ஜூலை 21) தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சேர்க்கை படங்களுக்கான காலக்கெடு வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இது குறித்து தகவல் அறிய விரும்புபவர்களும், சேர விரும்புபவர்களும் அதிகாரப்பூர்வ வலைதளங்களான keralauniversity.ac.in அல்லது admissions.keralauniversity.ac.in மூலம் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் ஆன்லைன் சேர்க்கை படிவங்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்த பிறகு தேர்வு செய்யப்பட்டவர்களின் முதல் பட்டியல் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் எனவும், இரண்டாவது பட்டியல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் கல்லூரி சேர்வதற்கான குறிப்பிட்ட தேதியை பல்கலைக்கழகம் இன்னும் அறிவிக்கவில்லை.
வலைதளத்தின் அதிகாரப்பூர்வ இணைப்பு:
https://admissions.keralauniversity.ac.in/ug2020/generate_chalan.php