கேரளாவில் நாளுக்கு நாள் வன்கொடுமை வழக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்குத் தீர்வு காண முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் உயர்மட்ட அலுவலர்கள், அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் இவ்வழக்குகளுக்கு உடனடியாகத் தீர்வு காண உயர்மட்டக் குழு ஒன்று அமைத்திட முடிவு எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு வன்கொடுமை வழக்குகள் கண்காணிக்கப்பட உள்ளன. கேரளாவில் சமீபத்தில் வன்கொடுமை செயல்களால் எழும் போராட்டம் அரசுக்கு, பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
தற்போது அரசின் இந்த நகர்வு இதற்கு உரிய தீர்வைப் பெற்றுத்தர உதவும் என்று நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: