இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் கேரளாவில் தேசிய-மாநில நெடுஞ்சாலைகளில் 12 ஆயிரம் பொதுக் கழிவறைகள் அமைக்க முடிவுசெய்யப்பட்டது.
இதற்காக, நெடுஞ்சாலைகளுக்கு அருகே மூன்று சென்ட் அளவிற்கு இடம் கண்டறியுமாறு உள்நாட்டு அமைப்புகளுக்கு உத்தரவிடவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், நெஞ்சாலைகளில் கழிவறைகள் இல்லாததால் மக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாவதாகவும், பெட்ரோல் பங்குகளில் வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அங்கிருக்கும் கழிவறைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளதாகக் கூறினார்.
இந்தப் பின்னணியில் நெஞ்சாலைகளில் 12 ஆயிரம் பொதுக் கழிவறைகளை அமைக்க முடிவெடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'காவிரி வேளாண் மண்டலம் தொடர்பாக விரைவில் நல்ல அறிவிப்பு வரும்' - முதலமைச்சர் பழனிசாமி