கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள கேரளா - தமிழ்நாட்டை இணைக்கும் சின்னார் பாலத்தில், இரு மாநிலங்களையும் சேர்ந்த காதல் ஜோடிக்கு, ஜூன் ஏழாம் தேதி திருமணம் நடைபெற்றது. கரோனா ஊரடங்கு காரணமாக, எல்லைப் பகுதியில் எளிமையாக தங்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்ததாக அத்தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய முன்னாள் தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. மணி "மணமகள் கேரளாவைச் சேர்ந்தவர், மணமகன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். திருமணத்திற்காக அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பயணம் செய்ய முடியாததால், இத்திருமணத்தை எல்லையில் நடத்த முடிவு செய்யப்பட்டது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாழ்த்து கூற வந்தவர்களுக்கு மாஸ்க், சானிடைசர் - விழிப்புணர்வு ஏற்படுத்திய மணமக்கள்