ETV Bharat / bharat

திருவனந்தபுரம் தேர்வு மையத்திற்கு வெளியே கூடிய மக்கள் - வைரலாகும் புகைப்படம் - திருவனந்தபுரம் தேர்வு மையம்

திருவனந்தபுரம்: பட்டோமில் உள்ள கீம் தேர்வு மையத்திற்கு வெளியே மாணவர்கள், பெற்றோர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kerala-social-distancing-norms-violated-outside-thiruvananthapuram-exam-centre

author img

By

Published : Jul 17, 2020, 12:08 PM IST

திருவனந்தபுரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நுழைவுத் தேர்வுகளை நடத்துவதில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அலுவலர்கள் உறுதி செய்திருந்தனர். இந்நிலையில், கேரள அரசு நேற்று (ஜூலை 16) மாநிலம் முழுவதும் கேரள பொறியியல் கட்டடக்கலை மருத்துவ (கீம்) நுழைவுத் தேர்வை நடத்தியது.

பட்டோம் செயின்ட் மேரியின் உயர்நிலைப்பள்ளிக்கு வெளியே பெற்றோர்களும், மாணவர்களும் தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக இருந்தனர். தேர்வு முடிந்தவுடன் கரோனா தொற்றால் அமைக்கப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் மீறி கூட்டம் கூட்டமாக இருந்தனர். இந்தக் கூட்டத்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலாகியுள்ளது.

மேலும், நேற்று (ஜூலை 16) கேரளாவில் 722 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,275ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 5,372 சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.