ETV Bharat / bharat

மருத்துவ பங்காற்றுதலில் விஞ்சி நிற்கும் கடவுளின் தேசம்!

எர்ணாகுளம் (கேரளா): கோவிட்-19 பாதிப்பிருந்த இங்கிலாந்து நாட்டின் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பூரணமாக குணமடைந்து நேற்றிரவு சிறப்பு விமானத்தில் தங்கள் தாயகம் திரும்பினர்.

Kerala sets health care model
Kerala sets health care model
author img

By

Published : Apr 16, 2020, 5:19 PM IST

கேரளா மாநிலம் கொச்சியில் இருக்கும் ஆஸ்டர் மெட்சிட்டி மருத்துவமனையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீவன் ஹான்காக் (61) அவரது மனைவி அன்னே வில்லியம் (61), ஜேனட் லே (83), ஜேன் எலிசபெத் ஜாக்சன் (63) ஆகியோர் கரோனா நோய்க் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். இச்சூழலில் அவர்கள் கரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்ததால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதற்கு முன்னர் திருவனந்தபுரம், எர்ணாகுளம் மருத்துவமனைகளில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த ராபர்டோ டோனோசோ (57), இங்கிலாந்து நாட்டவர்களான லான்சன் (76) எலிசபெத் லான்ஸ் (76), பிரையன் நீல் (57) ஆகியோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்திருந்தனர். அவர்களில், பிரையன் நீல் மார்ச் மாதம் 15-ஆம் தேதி விமானநிலையத்தில் நிறுத்தப்பட்டு, பரிசோதிக்கப்பட்டார். அதன் பின் அவர் கொச்சியில் இருக்கும் கலமாசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சிறப்பு அனுமதி பெற்ற பின்னர் அவருக்கு எச்.ஐ.வி-க்கான மருந்து வழங்கப்பட்டது. அது அவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு முக்கியமாக உதவியதாக கூறப்படுகிறது. மேலும், குணமடைந்த வெளிநாட்டவர்கள் கொச்சியில் உள்ள போல்கட்டி தங்கு விடுதியில் கண்காணிக்கப்பட்டனர். கண்காணிப்புக் காலத்திற்குப் பிறகு நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

திருவனந்தபுரம், எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் முன்மாதிரியாக சிறப்பாக பணியாற்றுவதாக கூறி, அம்மாநிலத்தின் சுகாதார அமைச்சர் கே. கே. ஷைலஜா பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில் சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் மீண்டும் சோதனை செய்து அவர்கள் பூரண குணமடைந்தது உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் நேற்றிரவு (ஏப்ரல் 15) சிறப்பு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் கொச்சியிலிருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்றனர். மார்ச் 11ஆம் தேதிக்கு முன்னர் கேரளாவுக்குச் சுற்றுலா வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்பட 268 வெளிநாட்டினர், நிர்ணயிக்கப்பட்ட தனிமைப்படுத்தல், கண்காணிப்பு காலத்தை முடித்துவிட்டு தங்கள் சொந்த நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

மொத்தம் 268 பேரில், 110 பேர் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்தும், மீதமுள்ள 158 பேர் கொச்சி விமான நிலையத்திலிருந்தும் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பினர். களமசேரி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 8 வெளிநாட்டினரையும் சிகிச்சையளித்து குணப்படுத்தியது கேரள சுகாதாரத் துறைக்கு பெருமை சேர்க்கும் தருணம் என்று உலக மக்கள் பாராட்டி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.