குரங்குகளின் உடலில் மேயும் சில வகை உண்ணிகளால் மனிதருக்குப் பரவும் நோய், 'கியாசனூர் வன நோய்'. இது ' குரங்குக் காய்ச்சல்' என்றும் அழைக்கப்படுகிறது.
இதனிடையே, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மன்னதாவடி பகுதியைச் சேர்ந்த மீனாக்ஷி என்ற 50 பெண் இந்தக் குரங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த இவர், மருத்துவம் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த வகை காய்ச்சலால் மேலும் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அம்மாநில சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
கடந்தாண்டு, இதே மாவட்டத்தில் உண்ணிகளிலிருந்து மனிதருக்குப் பரவிவரும் ஒருவகை வைரசால் 11 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவரும் சூழலில், தற்போது குரங்குக் காய்ச்சலுக்கு கேரளப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அம்மாநில மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க : ஜார்க்கண்ட்டில் பட்டினி சாவு?